சனிமூலை!
நண்பர் ஒருவர், திரு. யதார்த்தா பென்னேஸ்வரன், நாடகத்துறையில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். கிட்டத்தட்ட சாமி வந்த உத்வேகத்துடன் ‘வடக்கு வாசல்’ என்ற மாத இதழைத் தன்னந்தனியாக தில்லியிலிருந்து மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சஞ்சயன்,வியாசன், அங்கதன், ராகவன் தம்பி என்ற பல புனை பெயர்கள் அவருக்கு உண்டு! வடக்கு வாசலின் கடைசி மூன்று பக்கங்களில் ராகவன் தம்பி என்ற பெயரில் அவர் எழுதும் ‘சனிமூலை’ கட்டுரை நான் மிகவும் விரும்பிப் படிப்பவற்றுள் ஒன்று. அது பற்றிய என் கவிதை கீழே:
சனிமூலை,
வாசகர் நெஞ்சில் நீங்கா இடம் பெற்ற தனி மூலை;
கருத்தாழத்தில் நுனிப்புல் மேயாத மூலை;
வடக்கு வாசலைப் பின் அட்டையிலிருந்து படிக்கத் தூண்டும் நவரசக் கனிமூலை;
Fast food விரும்பிகளுக்கு நல்ல நொறுக்குத் தீனி மூலை!
http://www.vadakkuvaasal.com/
http://sanimoolai.blogspot.com/
சினிமா விரும்பி
on November 19th, 2008 at 12:54 am
நன்றி
அருமையான வலைதள அறிமுகத்திற்க்கு
on November 19th, 2008 at 1:58 am
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி வால் பையன் !
சினிமா விரும்பி
on November 21st, 2008 at 3:44 am
என் மீதும்் என் எழுத்துக்கள் மீதும் நீங்கள் வைத்து இருக்கும் அன்புக்கும் உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் மிக்க நன்றி ரமேஷ்.
ராகவன் தம்பி
on November 21st, 2008 at 5:36 am
வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி யதார்த்தா அவர்களே!
சினிமா விரும்பி